Quantcast
Channel: பெண் என்னும் புதுமை
Viewing all articles
Browse latest Browse all 164

தீபாவளியும் பிளாஸ்டிக் புன்னகையும்

$
0
0
சற்றென்று வெடி ஓன்று
வெடிக்கிறது மனதில்
சாலையோர விபத்துச்  செய்தியால்

மனதிற்குள் சரவெடி வெடிக்கிறது
உறவினர் கொலைசெய்யப்பட்ட செய்தி

தேகம் எங்கும் மத்தாப்பு கொண்டு
தீ வைத்தது போல எரிகிறது
அத்துமீறி ஆக்கிரமிக்கும் மனிதர்களை காணுகையில்

தீக்குச்சியின் தலையில் தீப்பற்றும் போதெல்லாம்
என்னை எரிப்பது போல வெகுண்டு எழுகிறேன்

புத்தாடைக் கட்டும் போது
நெசவாளர்களின் இறப்பு கண்முன் நிழலாடுது

பலகாரம் உண்ணும் போது
பஞ்சத்தில் இறந்தவர்களின் சடலங்கள்
திரையில் காட்சியாய்

இவற்றையெல்லாம் மறந்து
இயல்பாய் என்னால் கொண்டாட முடியவில்லை
ஆகையால் வெறுமனே சம்பிரதாய
வாழ்த்துகளை பிளாஸ்டிக் புன்னகையோடு மட்டுமே
பகிர முடிகிறது தீப திருநாள் வாழ்த்துக்கள்

Viewing all articles
Browse latest Browse all 164

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்